இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 28 April 2024

இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், மகளிர் கல்லூரி லியோ சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து லயன் இ ஆர் கே சம்பத் குடும்பத்தார், ஸ்ரீ செந்தூர் ஆபரண மாளிகை குடும்பத்தார் பி எம் ஜே எப், லயன் ஏ ஆர் மோகன்ராம் நினைவாக Rtn ஏ எம் சுபாஷ் குடும்பத்தினர் எம்எஸ்விஎல் தங்க மாளிகை குடும்பத்தார் ஆகியோர் நிதி உதவியுடன் நடைபெற்ற   இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் குழுவினர் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறித்து ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் 473 பேருக்கு பரிசோதனை செய்து 27 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. கண் அறுவை சிகிச்சைக்காக  276 பேர்  தேர்வு செய்யப்பட்டு அதில் 111 நபர்கள் இன்று மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மீதமுள்ள165 நபர்கள் மே 2 ந் தேதி வியாழக்கிழமை அன்று அனுப்பி வைக்கப்படுவார்கள். கடந்த மாதம் அறுவை சிகிச்சைக்கு உள்ளான 298 பேருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு 185 பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.


நிதி உதவி அளித்து கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் சேவையாற்றிய அரிமாக்களுக்கும் லியோ பிள்ளைகளுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என என லயன் இன்ஜினியர்  மற்றும் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்  தலைவர் சு. கண்ணன் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad