மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 19 February 2024

மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயம்.


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், பொன்னாங்கண்ணிக்காட்டில், மாட்டுவண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அடைக்கலம் காத்த அய்யனார் குரூப்ஸ், வள்ளுவர் மன்றம், வ.உ.சி இளைஞர் மன்றம், ரோலிங் முள்வேலி குரூப்ஸ், நியூ ஃபிரண்ட்ஸ் குரூப்ஸ் மற்றும் பொன்காடு கிராமத்தினர் சார்பில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் பெரிய மாடு, நடுமாடு, பூஞ்சிட்டு மாடு, பெரிய குதிரை, சிறிய குதிரை என ஐந்து பிரிவுகளில், 6 போட்டிகள் நடத்தப்பட்டது. 

இதில், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 75 ஜோடி மாட்டு வண்டிகளும், 24 ஜோடி குதிரை வண்டிகளும் பங்கேற்றன. மொத்த பரிசாக ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்டது.  கொடிப்பரிசாக பீரோ, கட்டில், சீலிங் பேன், அயர்ன் பாக்ஸ், வழங்கப்பட்டது. 


பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை சாலையில் இருமருங்கும் இருந்து ஆயிரக்கணக்கான பந்தயக்கலா ரசிகர்கள் கண்டு ரசித்தனர். 


பேராவூரணி நீலகண்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad