கதிர் அறுக்கும் இயந்திர வாடகை நிர்ணய முத்தரப்பு கூட்டம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 24 January 2024

கதிர் அறுக்கும் இயந்திர வாடகை நிர்ணய முத்தரப்பு கூட்டம்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி அறுவடை தொடங்க உள்ள நிலையில் கதிர் அறுக்கும் இயந்திர வாடகை தொகையை நிர்ணயிக்க விவசாயிகள் தனியார் கதிர் அறுக்கும் இயந்திர உரிமையாளர்கள் அதிகாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலர் காவல் துறை அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  தீபக் ஜேக்கப்  தலைமை வகித்தார் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்  செல்லக்கண்ணு வேளாண்மை இணை இயக்குனர்  நல்லமுத்து ராஜா மாவட்ட ஆட்சியரின் வேளாண்துறை நேர்முக உதவியாளர் திருமதி கோமதி தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர் பேசுகையில் ஆண்டுதோறும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடத்தி கதிர் அறுக்கும் இயந்திர வாடகையை நிர்ணயம் செய்தாலும் நிர்ணயம் செய்த தொகையை விட ரூபாய் 300 முதல் ரூபாய் 500 வரை கூடுதலாக வசூல் செய்கிறார்கள் ஒவ்வொரு இயந்திர உரிமையாளரும் புரோக்கர்கள் மூலம் அதிக வாடையை கட்டணம் வசூல் செய்வதாக குற்றம் சாட்டினார்.


இது போன்ற முறைகேடுகளை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார் மாவட்ட ஆட்சித் தலைவர் நிர்ணயிக்கப்பட்ட வாடகை விட கூடுதலாக வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார் இக்கூட்டத்தில் கதிர் அறுக்கும் இயந்திர வாடகை ஒரு மணி நேரத்திற்கு அரசு இயந்திரம் பெல்ட் டைப் ரூபாய் 1880 டயர் டைப் ரூபாய் 1160 எனவும் தனியார் கதிர் அறுக்கும் இயந்திரம் பெல்ட் டைப் ரூபாய் 2500 டயர் டைப் ரூபாய் 1750 எனவும் ஒரு மனதாக நிர்ணயம் செய்யப்பட்டது.


இக்கூட்டத்தில் சுவாமிமலை விமலநாதன் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் என் வி கண்ணன் அய்யம்பேட்டை முகம்மது இப்ராஹிம் ஓலத்தவராயன் பேட்டை அறிவழகன் பிரனேஷ் இன்ஃபின்ட் ராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள் உதவி பொறியாளர் ரவீந்திரன் அமுதா ஆகியோர் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad