கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் மேலவெளி மாரியம்மன் கோவில் நடுத்தரவை சேர்ந்தவர் காலஞ்சென்ற கம்யுனிஸ்ட் பிரமுகர் தொழிலதிபர் கதிரேசன். இவரது மனைவி முத்திரத்தினம் கடந்த 24ஆம் தேதி இயற்கை எய்தினார். இதை எடுத்து திருப்பனந்தாள் மேலவெளியில் உள்ள தொழிலதிபர் ராகுலன் இல்லத்தில் அவரது தாயார் முத்திரத்தினம் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன் தலைமை தாங்கினார். தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் லோகநாதன், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், ரதிமீனா நிர்வாக இயக்குனர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு முத்துரத்தினம் உருவப்படத்தை திறந்து வைத்து பேசினர்.
இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் மிஷ்கின், ஆதித்யா, திருப்பனந்தாள் செயல் அலுவலர் ராஜதுரை, திருப்பனந்தாள் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்டாலின், லஷ்மி ராகுலன், சங்கமித்திரை, இன்ஜினியர் செல்வமுத்துகுமார், ரோட்டரி ரமேஷ், பரஸ்பர சகாய நிதி கணேசன், அமமுக இலக்கிய அணி செயலாளர் மெடிக்கல் முருகானந்தம், ஆகாசராஜன், டெல்டா செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment