கார்த்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்த நாள் விழா. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 14 July 2023

கார்த்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்த நாள் விழா.


கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  மற்றும் கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளி, கார்த்தி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் இன்று பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது .


படித்திடாத உயந்தவர் !
பண்புமிக்க ஏழையர்!
மக்கள் வாழ வாழ்ந்தவர் !
கல்வி கண்ணைத் திறந்தவர் !
காமராஜர் பெருந்தலைவர். இவ்வாறான பல பெருமைக்குரிய கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக இன்று பள்ளியில் கொண்டாடப்பட்டது.  பள்ளி தாளாளர் .எஸ் ஏ. கார்த்திகேயன், பன்னாட்டு பள்ளி தாளாளர் திருமதி.பூர்ணிமாகார்திகேயன் பள்ளி முதல்வர்  டி .அம்பிகாபதி மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


எல் கே ஜி, யு கே ஜி  வகுப்பு 121 குழந்தைகள் காமராஜரை நினைவுப் படுத்தும் விதமாக காமராஜரை போல் வேடமணிந்து அவரைப் போற்றி பாடல்களை பாடினர். மேலும் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் காமராஜரை போற்றி பாடல்களை பாடி நடனமாடினர் காமராஜர் வழி நடப்போம் என அனைத்து மாணவ மாணவியர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். 



காமராஜரின் வாழ்க்கை வரலாறு, காமராஜரின் தியாகம், காமராஜரின் நாட்டுப்பற்று, காமராஜரின் விடுதலைப் போராட்டம், காமராஜரின் பல்வேறு கல்விக்காக ஏற்படுத்திய திட்டங்கள் போன்றவற்றை பற்றி ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் எடுத்துக் கூறினர். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள், ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad