தஞ்சையில் புனித அடைக்கல மாதா ஆலய ஆண்டு பெருவிழா தொடக்கம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 30 April 2023

தஞ்சையில் புனித அடைக்கல மாதா ஆலய ஆண்டு பெருவிழா தொடக்கம்.


தஞ்சையில் புனித அடைக்கல மாதா ஆலய ஆண்டு பெருவிழா தொடக்கம். 

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை  அருகேயுள்ள  புனித அடைக்கல மாதா ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை இரவு தொடங்கியது.


 புனித அடைக்கல மாதா ஆலயத்தில்  ஆண்டுதோறும் மே மாதத்தில் ஆண்டுப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.


நிகழ்ச்சியில், ஆலய பங்குத்தந்தை ஏ .ஜெயராஜ்  மாதா திருவுரும் பொறிக்கப்பட்ட கொடியைப் புனிதப்படுத்தி, ஆலய வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் ஏற்றிவைத்தனா். தொடா்ந்து தினந்தோறும் மாலை நேரங்களில் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களின் பங்கு தந்தையா்களால் சிறப்புத் திருப்பலியும், சிறிய சப்பரங்களில் அன்னையின் வீதியுலாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் முக்கிய விழாவான தோ்பவனி வரும் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. 7-ஆம் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.


இதற்கான ஏற்பாடுகளை பங்குத் தந்தை ஏ .ஜெயராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad