மனோராவில் மண்டல அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பீச் வாலிபால் இறுதிப் போட்டி கலெக்டர் தொடங்கி வைத்தார்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தஞ்சாவூர் மாவட்ட பிரிவு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான திருச்சி மண்டல அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பீச் வாலிபால் இறுதிப் போட்டி சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மனோராவில் நடைபெற்றது. திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இறுதிப்போட்டியினை தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார். இறுதிப்போட்டியில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி மாணவர்கள் முதலிடத்தையும், குத்தாலம் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், அதிராம்பட்டினம் காதர்முகையதீன் கல்லூரி மாணவர்கள் மூன்றாம் இடத்தையும், தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் நான்காம் இடத்தையும் பெற்றனர். போட்டியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட், பயிற்சி கலெக்டர் விஷ்னுப்பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன், ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா பேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment