பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 5 March 2023

பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

பழைய பென்சன்திட்டம் உள்ளிட்ட10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் தஞ்சாவூர் பன்கல் கட்டிடம் முன்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.ரங்கசாமி ,பி இளையராஜா ,ஈ சத்தியசீலன் ,எஸ் .பன்னீர்செல்வம்  ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர். 


மாநில ஒருங்கிணைப்பாளர் நா.சண்முகநாதன் உண்ணவிரத போராட்டத்தை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார். இதில் ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும்  சங்கங்களின்; உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத்தில் சி.பி.எஸ். எனும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின்ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், நிரந்தர காலிப் பணியிடங்களில் தற்காலிக ஊழியர்களை அவுட்சோர்சிங் மூலம் நியமனம் செய்யாமல் நிரந்தர ஊழியர்களை நியமனம் செய்திடக் கோரியும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,

 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 6 இலட்சத்திற்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், 7வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad