கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் புத்தாக்கமேம்பாடு நிகழ்ச்சி . - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 11 March 2023

கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் புத்தாக்கமேம்பாடு நிகழ்ச்சி .

கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் புத்தாக்கமேம்பாடு நிகழ்ச்சி .




தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மண்டல மையமான அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி திருச்சிராப்பள்ளி சார்பாக இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான புத்தாக்க மேம்பாடு நிகழ்ச்சியை தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் திருச்சிராப்பள்ளி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எம். தமிழ்ச்செல்வன், மைய ஒருங்கிணைப்பாளர்  செல்வகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் தொழில் முனைவு வளர்ச்சித் துறையின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான கணேசன் வரவேற்பு உரையாற்றி, இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். கல்லூரி முதல்வர்  எம். மதிவாணன்  இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர்கள் எஸ். சத்யா மற்றும் அரவிந்தன் ஆகியோர் பங்கு பெற்று மாணவர்களிடம் தொழில் தொடங்கும் முயற்சியுடன் வங்கியை எவ்வாறு அணுக வேண்டும் வங்கியில் அரசின் சலுகைகள் பற்றி எடுத்துரைத்தனர். மேலும், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஜிபிஎம் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் தொழில் முனைவோர் லோகேஷ்,  மாணவர்களிடம் தொழில் முனைவர்களாக எவ்வாறு உருவாக வேண்டும் என்று ஊக்குவித்து கருத்துக்களை எடுத்துரைத்தார்.
நிறைவாக கல்லூரியின் முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் கனிமொழி நன்றி கூறினார்.

செய்தி: த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad