சன் ரைஸ் நர்சரி பள்ளியின் 21வது ஆண்டு விழா கொண்டாட்டம்: கோலாகலம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 18 March 2023

சன் ரைஸ் நர்சரி பள்ளியின் 21வது ஆண்டு விழா கொண்டாட்டம்: கோலாகலம்

சன் ரைஸ் நர்சரி பள்ளியின் 21வது ஆண்டு விழா கொண்டாட்டம்: கோலாகலம்


தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிபட்டி
சன் ரைஸ் நர்சரி பள்ளியின் 21வது ஆண்டு விழா கொண்டாட்டம் பள்ளி வளாகத்தில் சிறப்பாக  நடைபெற்றது. 
தஞ்சாவூர்.அடுத்த மனோஜிபட்டி 'சன் ரைஸ் நர்சரி மற்றும் பிரைமரி  பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை  நடைபெற்றது.


இந்த விழாவுக்கு, பள்ளித்  தலைமை ஆசிரியர் பாத்திமுனிஷா தலைமை வகித்தாா்.தஞ்சாவூர் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தனியார் பள்ளி டி.இ.ஓ கே.அமலா தங்கதாய், மார்னிங் ஸ்டார் மெட்ரிக் ஸ்கூல், கரெஸ்பாண்டெண்ட் கே பி அறிவானந்தம், திருச்சி டிஎஸ்பி, சி.சுபாஷ் சந்திரபோஸ் ,எம் என் ஹாஸ்பிடல்,ஆலோசகர் டி எம் ஸ்வாதி,ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினா். 

இதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை சிறப்பு விருந்தினராக அஞ்சுகம் பூபதி, அமலா தங்கதாய், அறிவானந்தம், ,சுபாஷ் சந்திர போஸ் ,ஸ்வாதி ஆகியோர் வழங்கினர்.


பின்னர், மாணவ,மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கல்வி நிறுவன  முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.







No comments:

Post a Comment

Post Top Ad