இந்து முன்னணி சார்பில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 - ம் தேதி கோவை குண்டுவெடிப்பில் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பலியானார்கள். இவர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இந்து முன்னணி சார்பில் தஞ்சையில் நேற்று மாலை நடைபெற்றன.
தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்தமிழ் செல்வன் முன்னிலை வகித்தார். திருவாரூர் மாவட்ட செயலாளர் விக்னேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் நட. முருகன், செயற்குழு உறுப்பினர் நாக். அதியமான், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈசான சிவம் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை ஒன்றிய செயலாளர் திவாகர் நன்றி கூறினார். முடிவில் கோவை குண்டுவெடிப்பில் பலியாகி உடல்கள் சிதறி கிடக்கும் காட்சிகள் அடங்கிய பிளக்ஸ் போர்டு வைத்து புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments:
Post a Comment