பேராவூரணி அருகே தைப்பூச பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்னிசை பாட்டு பட்டிமன்றம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 7 February 2023

பேராவூரணி அருகே தைப்பூச பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்னிசை பாட்டு பட்டிமன்றம்

பேராவூரணி அருகே தைப்பூச பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்னிசை பாட்டு பட்டிமன்றம்.



தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், பனங்குளம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு வள்ளி தேவஸேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச பெருந்திருவிழாவை முன்னிட்டு சன் டிவி காமெடி ஜங்ஷன் புகழ், நவரச நாயகன் ,என்.ராஜநிதி தலைமையில், இன்று நமது வாழ்க்கை பூந்தோட்டமா? போராட்டமா ?என்ற தலைப்பில் இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது. 

போராட்டமே என்ற தலைப்பில் ராஜ.ஜெய்சங்கர், தேவகோட்டை ராஜன், ஆகியோரும் பூந்தோட்டமே என்ற தலைப்பில் ஜெயசித்ரா, மணப்பாறைலலிதா ஆகியோர் வாதிட்டார்கள்.இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நடுவர்
என். ராஜநிதி தீர்ப்பு வழங்கி பேசினார் அப்போது அவர் பஞ்சு மிட்டாய் ,பாணிபூரி தூக்கி வந்த இந்தி, உன் வாழ்வை தூக்கி அடிக்கும் டா தமிழகத்தில் குந்தி. மேல தெருவில் வடநாட்டுக்காரன், கீழத்தெருவில் வடநாட்டுக்காரன், நடுத்தெரு டாஸ்மாக்கில் நம் நாட்டுக்காரர்கள் இப்படியே போனால் ஒருவேளை சோற்றுக்கு பிச்சை எடுக்கிற நிலைமை கூட வரலாம் எனவே இன்றே சிந்தியுங்கள்உன்னுடைய வெற்றியையும் தோல்வியையும் முடிவு செய்வது குரு பெயர்ச்சியோ, சனி பெயர்ச்சியோ இல்ல உன்னுடைய விடா முயற்சியே! ஒரு மொழியை அழித்து விட்டால் அந்த இனத்தையே அழித்து விடலாம். அந்த நோக்கத்தில் தான் இங்கு எல்லாமே நடக்கிறது எனவே இன்றே வீர்கொண்டு எழு தமிழா, உன் வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும் என்று தீர்ப்பு வழங்கினார்.



முன்னதாக வழக்கறிஞர் .குழ. செ.அருள்நம்பி பட்டிமன்றத்தை துவக்கி வைத்து பேசினார். பனங்குளம் குமாரசாமி வாழ்த்தி பேசினார். விழா ஏற்பாடுகளை பனங்குளம் கிராமத்தார்கள் மற்றும் எழுச்சிமிகு இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.


செய்தியாளர் த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad