பேராவூரணி அருகே புத்தாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மண்டல மையமான அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி திருச்சிராப்பள்ளி சார்பாக புத்தாக்க கண்டுபிடிப்புகள் 2022 என்கிற தலைப்பில் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை தஞ்சை மாவட்டம், பேராவூரணி தாலுகா டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் திருச்சிராப்பள்ளி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எம் தமிழ்ச்செல்வன், மைய ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் துறையின் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் மதிவாணன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் தொழில் முனைவு வளர்ச்சித் துறையின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் இந்த விழிப்புணர்வு முகாமின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு விளக்கி கூறினார். விழாவில் மைய கள ஒருங்கிணைப்பாளர் அமர்நாத் மாணவர்களுக்கு புத்தாக்க அறிவை தூண்டும் விதமாக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கட்டுமானத்துறையில் இன்டெர்லாக் செங்கற்கள் உற்பத்தினை தஞ்சை மாவட்டத்தில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் ஆர்.அண்ணாதுரை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நிறைவாக கல்லூரியின் முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் கனிமொழி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் த.நீலகண்டன்

No comments:
Post a Comment