டெங்கு கொசு ஒழிப்பு அறிவுருத்தல்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காட்டில் கொசு ஒழிப்பு பணி குழுவினர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி. சௌந்தரராஜன் தலைமையில் ஒவ்வொரு வீடாகச் சென்று டெங்கு கொசுவை உருவாக்கக்கூடிய தண்ணீர் தேங்க கூடிய பொருள்களை அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு , பகலில் தான் டெங்கு கொசு கடிக்கும். நல்ல தண்ணீரில் தான் டெங்கு கொசு உருவாகிறது.
மூன்று நாட்களுக்கு மேல் நல்ல தண்ணீரை பிடித்து வைத்திருப்பதால் டெங்கு கொசு உருவாகிறது எனவேநல்ல தண்ணீரை உடனுக்குடன் பிடித்து அதை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும் எனவும் காய்ச்சியை தண்ணீரை குடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
செய்தி : த.நீலகண்டன் பேராவூரணி.

No comments:
Post a Comment