திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமியின் 176வது ஆராதனை விழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 6 January 2023

திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமியின் 176வது ஆராதனை விழா

திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமியின் 176வது ஆராதனை விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமியின் 176வது ஆராதனை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு விழாவைத் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஸ்ரீதியாகப்ரம்ம மஹோத்ஸவ சபைத் தலைவர் ஜி.கே.  வாசன் தலைமையில் நடைபெறும் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா கலந்து கொண்டார்.



இதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு ரஞ்சனி, காயத்ரி பாட்டு, 7.20 மணிக்கு குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா பாட்டு, 7.40 மணிக்கு ஜெ.பி. கீா்த்தனா பாட்டு, 8 மணிக்கு ஜெ.ஏ. ஜெயந்த் புல்லாங்குழல், 8.20 மணிக்கு பெங்களூா் விவேக் சதாசிவம் பாட்டு, 8.40 மணிக்கு திருச்சூா் டி.எச். லலிதா, கே.சி. விவேக் ராஜா இரு வயலின், 9 மணிக்கு காயத்ரி கிரிஷ் பாட்டு, 9.20 மணிக்கு சாலியமங்கலம் ஜி. ராமதாஸ் வீணை, 9.40 மணிக்கு திருப்பரங்குன்றம் கே.ஏ. வேல்முருகன், வள்ளியூா் சங்கர சுயம்புலிங்கம் நாகசுரம், 10 மணிக்கு திருமானூா் டி.சி. கணேசன், டி.சி. கருணாநிதி நாகசுரம் ஆகிய நிகழ்ச்சிகள்  நடந்தது.
இன்று சனிக்கிழமையான (ஜன. 7) முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை இளம் மற்றும் மூத்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபபெற்றது.


நிறைவு நாளான ஜனவரி 11ம் தேதி காலை 7.45 மணிக்கு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனையை தமிழக ஆளுநர் ஆர்.என்.  ரவி ஆரம்பிக்கிறார்.  காலை 9 மணி முதல் 10 மணி வரை ஸ்ரீதியராஜ ஸ்வாமிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.

No comments:

Post a Comment

Post Top Ad