தை மாதம் சதய நட்சத்திரத்தை முன்னிட்டு எம்பெருமான் ஆபூதி நாயனாரின் குருபூஜை விழா திங்களூர் தண்ணீர் பந்தலில் நடைபெற்றது.
திருவையாறு ஜன.25
திருவையாறு அருகே திங்களூர் தண்ணீர் பந்தலில்
தை மாதம் சதய நட்சத்திரத்தை முன்னிட்டு எம்பெருமான் அப்பூதி நாயனாரின் குரு பூஜை விழா நடந்தது.
அப்பர் திருநாவுக்கரசர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அடியார்கள் மற்றும் பொது மக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
அப்பூதி நாயனார் அப்பர் பெருமானின் திருநாமத்தையே ஓதி உணர்ந்து எம்பெருமான் தில்லை நடராஜபெருமானின் திருவடியை சென்று அடைந்தார் என்பது வரலாறு.
குருபூஜை விழா ஏற்பாடுகளை திருச்சோற்றுத்துறைஅன்னபூரணி தர்மசத்திரம் மற்றும் வேத பாடசாலை அறக்கட்டளை குடும்பத்தினர் செய்திருந்தனர்

No comments:
Post a Comment