பாபநாசம் அருகே கபிஸ்தலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மறைந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் கலியமூர்த்திக்கு இரங்கல் தீர்மானம் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து உட்பட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
கூட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுரேஷ் சரவண பாபு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி பொதுமக்கள் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பல கலந்து கொண்டனர் கூட்டத்தின் இறுதியில் ஊராட்சி மன்ற செயலர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்

No comments:
Post a Comment