பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா.எம்எல்ஏ.என்.அசோக்குமார் கொடியேற்றி சிறப்புரை.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் 74 ஆவது குடியரசு தின கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி பெருந்தலைவர் சாந்திசேகர் தலைமை வகித்தார். செயல் அலுவலர் பா. பழனிவேலு, துணை பெருந்தலைவர் கி.ரெ.பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் கலந்துகொண்டு குடியரசு தின கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
திமுக ஒன்றிய செயலாளர் க. அன்பழகன் ,மாவட்ட அவை தலைவர் சுப .சேகர், முன்னாள் மாவட்டதுணைச் செயலாளர்என். செல்வராசு, நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், கூட்டுறவு சங்க தலைவர் ஆர். பி. ராஜேந்திரன் ஆகியோர் குடியரசு தினத்தை பற்றி பேசினர். விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆர்.கே .ராஜேந்திரன் , ஹபீபாமுகமதுபாரூக், த.முருகேசன்,
ரம்யா அரவிந்தன், ரெஜாபீவி முகமதுராவுத்தர் ,பழனியம்மாள் நீலமேகம், அஞ்சம்மாள் ராஜேந்திரன், மகாலட்சுமி சதீஷ்குமார், மணிமாலா நீலகண்டன், வீ.ப.நீலகண்டன், சு.பழனிவேல்சங்கரன், மு.ஆனந்தன், மு.த. முகிலன், பீ. காரல்மார்க்ஸ் ,சுமதி நீலகண்டன் மற்றும் பேரூராட்சிஅலுவலக ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்திற்கு 14 பேட்டரி வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டிருந்தது அதனை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
செய்தியாளர் த.நீலகண்டன் .

No comments:
Post a Comment