நகரும் நடமாடும் அங்காடி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த சேதுபாபாசத்திரம் அருகே நாடியம் ஊராட்சி பிள்ளையார் திடல் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அப்பகுதியில் ரேசன் கடை இல்லாததால் தினமும் நான்கு கிலோ மீட்டர் நடந்து வந்து நாடியம் கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் பொருட்களை வாங்கி சென்றுள்ளனர்.
இந்நிலையில் இவர்களின் நிலையை அறிந்த நாடியம் ஊராட்சி மன்ற தலைவர் அப்பகுதியில்நகரும் நடமாடும் அங்காடியை ஏற்பாடு செய்திருந்தார். இதனை பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் கலந்துக் கொண்டுதிறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
உடன் சேதுபாபாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் வட்ட வழங்கல் அலுவலர் அருள்மணி ஒன்றிய கவுன்சிலர்கள் பாமா செந்தில்நாதன் சிவமதிவாணன் நாடியம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்செல்வன் மற்றும் கூட்டுறவு சங்க இயக்குநர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நகரும் நடமாடும் அங்காடிக்கு நாடியம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்செல்வன் தனது சொந்த வாகனத்தை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: நீலகண்டன்

No comments:
Post a Comment