மத்திய அரசை கண்டித்து ஜனவரி 24ம் தேதி நடைபெறும் தொழிலாளர் சங்க கூட்டத்தில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மாவட்ட சங்க அலுவலகத்தில் தலைவர் ரெ. சேகர். தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார்.சங்க நிர்வாகிகள் ஜி. சுகுமாரன், வெ.சேவையா, மு. இராமையன், ப. செல்வராஜ், இசக்கி அம்மாள் மற்றும் பண்ணை சங்க பொதுச்செயலாளர் உ.அரசப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக போராடிப்பெற்ற தொழிலாளர் சட்டங்கள், தொழிற்சங்க சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளதை, சுருக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், கட்டுமானம் உள்ளிட்ட நலவாரிய நிதிகளை அதிகப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஏஐடியூசி தமிழ் மாநில குழுவின் முடிவுப்படி வருகிற ஜனவரி24 ம் தேதி நடைபெறும் மாநிலந்தழுவிய மறியல் போராட்டத்தில் தஞ்சை மாவட்ட கட்டுமான சங்க தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்று வெற்றி பெறச்செய்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:
Post a Comment