இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் உ.ராமசாமி 19ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
ஜனவரி-16 1950-ம் ஆண்டிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றிய தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை சாலியத் தெருவில் வசித்து வந்த உ.ராமசாமி அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அவரது இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் கே. ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.திருநாவுக்கரசு, டி.ஜி.நாகராஜன் டி. ராஜேந்திரன், மறைந்த தலைவரின் மகன் ஆர். உமாபதி உள்ளிட்ட உறவினர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment