மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளராக எஸ்.கந்தசாமி தேர்வு .
பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்தக்கோரி தீர்மானம் .
பேராவூரணி, நவ.16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பட்டுக்கோட்டை ஒன்றிய 14 ஆவது மாநாடு நடைபெற்றது.
மாநாட்டுக்கு தனபால், மோரீஸ் அண்ணாதுரை, நதியா ஆகியோர் தலைமை வகித்தனர். ரெ.ஞானசூரியன் வரவேற்றார். மூத்த தோழர் பாலகிருஷ்ணன் கொடியேற்றினார். முருக.சரவணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி வேலை அறிக்கை வாசித்தார்.
மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், என்.வி.கண்ணன், எம்.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மாநாட்டில், 11 பேர் கொண்ட ஒன்றியக்குழுவும், ஒன்றியச் செயலாளராக எஸ்.கந்தசாமியும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானம் பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். பட்டுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, நகரத்தைச் சுற்றி புறவழிச்சாலை அமைக்க வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
காட்டாறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். வேதபுரி வாய்க்காலின் இருபுறமும் கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஏற்பாடுகளை மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் மெரினா பூ.ஆறுமுகம், செயலாளர் ஆர்.ஞானசூரியன், பொருளாளர் என்.கந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment