இரண்டாம்புளிக்காடு கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
பேராவூரணி ஜூலை.27- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ரெண்டாம்புளிக்காடு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் த.சுகுமார், உதவித் திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுவாதி காமராஜ் முன்னிலை வகித்தனர்.
பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி, மாற்றுத் திறனாளி ஒருவருக்கு நூறு நாள் வேலைத் திட்ட அடையாள அட்டையை வழங்கி, அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழாப் பேருரையாற்றினார்.
நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன், நாகேந்திரன், பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தனபால், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில், பல்வேறு கோரிக்கைகள அடங்கிய நூற்றுக்கணக்கான மனுக்களை பொதுமக்கள் கணினியில் பதிவு செய்து அலுவலர்களிடம் வழங்கினர்.
பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment