இஸ்லாமிய நாடுகள் கூட ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானியம் வழங்குவதில்லை: மாநில அரசு வழங்குகிறது - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 28 June 2024

இஸ்லாமிய நாடுகள் கூட ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானியம் வழங்குவதில்லை: மாநில அரசு வழங்குகிறது

 


இஸ்லாமிய நாடுகள் கூட ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானியம் வழங்குவதில்லை: மாநில அரசு வழங்குகிறது



தமிழக அரசு ஹஜ் மானியம்12,000 முதல் 25 ,000 ஆக உயர்த்தி உள்ளது. .யாரு அப்பன் வீட்டு பணத்தை யார் வாரி இறைப்பது? என சிவ சேனா கட்சி சார்பாக அறிக்கை வெளியிட்டது.


மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் பேசியதாவது:


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் இதுபோல் பயணங்கள் மேற்கொள்ளும் நபர்களுக்கு பணங்கள் கொடுக்க தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கியிருந்தது.


அந்த தீர்ப்பினை முதன்மையாகக் கொண்டு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு வழங்கி வந்த ஹஜ் மானியம் வழங்குவதை நிறுத்தியது.


ஆனால் மாநில அரசு 12,000 வழங்கி வந்த மானிய தொகையை 25,000 ஆக உயர்த்தி தற்போது அறிவித்துள்ளது. அரபு நாடுகள், பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் கூட இதுபோல் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு பணம் வழங்கப்படுவதில்லை.


 திராவிட கட்சிகளின் ஓட்டு அரசியலுக்காக மக்களின் வரிப்பணத்தை வாரி இறைப்பதா? 


கோவில் சொத்துக்களின் மூலம் வருவாய் ஈட்டிக் கொள்ளும் இந்து சமய அறநிலையத்துறை கூட கட்டணம் தரிசனம் என்ற பெயரிலும் அர்ச்சனை டிக்கெட் என்ற பெயரிலும் இந்துக்களிடம் மட்டும் வசூல் செய்து கொண்டிருக்கிறது. மேலும் மக்களிடம் எவ்வாறு காசு வசூல் செய்யலாம் என்றே செயல்பட்டு வருகிறது. 


ஆனால் மக்கள் வரிப்பணத்தை இவ்வாறு ஹஜ் பயணிகளுக்கு வாரி இறைப்பது எந்த வகையில் நியாயம் என்றும் யார் அப்பன் வீட்டுக்கு பணத்தை யார் செலவு செய்வது என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் எனக் கூறினார்

No comments:

Post a Comment

Post Top Ad