சுட்டெரிக்கும் வெயிலால் வரண்டுப் போன குளங்கள்
பேராவூரணி மே - 12 தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் நீர் நிலைகள் வரண்டு வருகின்றன. கால்நடைகள் தண்ணீரின்றி தவித்து அலைகின்றன. இந்நிலையில்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பெரியகுளம் உள்ளது இந்த குளத்தை நம்பி செங்கமங்களம் . பொண்ணாங்கண்ணிக்காடு. பழைய பேராவூரணி ஆகிய கிராமங்கள் தங்களது விவசாயத்திற்கும் மற்றும் கால்நடைகள் நீர் அருந்துவதற்கும் பயன்படுத்தி வந்தனர். கோடை காலங்களில் இந்த குளம் தண்ணீர் வற்றாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் இந்த குளம் தண்ணீர் வற்றி வரண்டுவிட்டது. இதனால் இப்பகுதியிலுள்ள கால்நடைகள் தண்ணீரின்றி தவித்து வருகின்றன. இதனைப் போல் பேராவூரணியை சுற்றியுள்ள சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த துறையூர் குளம் .ஆதனூர் பெரியகுளம் .நாட்டாணிக் கோட்டை பகுதியிலுள்ள முனிக்கோயில் குளம் .நாடகாடு பகுதியிலுள்ள கோட்டைக்குளம் என பல்வேறு குளங்கள் தண்ணீரின்றி வரண்டு காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் தவித்து வருகின்றன.
பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment