அரசு இஞ்சினியரிங் காலேஜ் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 15 September 2023

அரசு இஞ்சினியரிங் காலேஜ் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்.

கும்பகோணம் அரசு இஞ்சினியரிங் காலேஜ் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்திய மூன்று நாள் அறிவியல் தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் 12/9/2023 முதல்  14/9/2023 வரை சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் T. பாலமுருகன் அவர்கள் தலைமை வகித்து பேசுகையில் அறிவியல் தொழில்நுட்பமும், இன்றைய உலகின் முன்னேற்றம் மற்றும் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்த பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளரும் கல்லூரியின் துணை முதல்வருமான முனைவர் கலைமணி சண்முகம் அவர்கள் பங்கேற்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று இத்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமின் நோக்கம் மற்றும் பயன்களை எடுத்துரைத்தார். 


இக்கல்லூரியின் கல்விப் புலத்தலைவர் முனைவர் M. ருக்மாங்கதன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினார். இந்த பயிற்சி முகாமில்  தஞ்சாவூர் மாவட்ட தொழில் மைய மேலாளர் திரு. வீ.மணிவன்னன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து சுமார் 150 இறுதி ஆண்டு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


இப்பயிற்சி முகாமின் வாயிலாக தேசிய தகுதி வாய்ந்த திறன் பயிற்சிகளை மாணவர்கள் பெருவதுடன், புதுமையான அணுகுமுறைகளில் தொழில் முனைவு அனுபவம் மற்றும் உயர் தொழில்நுட்ப திறன் தேவைப்படும் வேலை வாய்ப்பை பெருவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டனர்.


மூன்றாம் நாள் நிறைவு விழாவில் பங்குபெற்ற மாணவ, மாணவிகளுக்கு  சான்றிதழ்கள் வழங்கப்பட்டது மேலும் மாணவர்கள் நிகழ்ச்சி பற்றிய தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பயிற்சி முகாமின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் M. தியாகராஜன் மற்றும் N. முகமது ஹாரிஸ் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad