பேராவூரணி ரயில் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டம் - 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 25 April 2023

பேராவூரணி ரயில் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டம் - 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


பேராவூரணி ரயில் நிலையத்தில் விரைவு ரயில் நின்று செல்ல வலியுறுத்தி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் -  500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு



தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி  முற்றுகை போராட்டம் பேராவூரணி வர்த்தக சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் தாம்பரம் - செங்கோட்டை ஜெகந்திராபாத் - ராமேஸ்வரம் உள்ளிட்ட அனைத்து விரைவு ரயில்களும் பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்  என வலியுறுத்தப்பட்டது. இதனை அடுத்து பேராவூரணி வட்டாட்சியர் சுகுமார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே நிலைய அதிகாரிகள் , போலீசார்கள் ஆகியோர்  பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தராஜ் திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் ரயில்  பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில்  முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.  அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தின் படி ரயில்  நின்று செல்லாவிட்டால்  பேராவூரணி ரயில் நிலையத்தில் ரயில்களை செயின் போட்டு நிறுத்துவது உள்ளிட்ட  பல கட்ட போராட்டங்களை நடத்தப் போவதாக வர்த்தக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


செய்தி: த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad