அப்துல் கலாம் நல்வழி இயக்கத்தின் சார்பாக, நடைபெற்ற உலக மகளிர் தின கொண்டாடப்பட்ட சிங்கப்பெண் விருதுகள் வழங்கும் விழா, பெசன்ட் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாரத் கல்வி குழும செயலாளர் புனிதா கணேசன், தலைமை வகித்தார், வெற்றி தமிழர் பேரவை மாநில செயலாளர், இரா.செழியன், பாரம்பரிய கழக( INTACH) ஒருங்கிணைப்பாளர், கே.சுவாமிநாதன், திரைப்பட பின்னணி பாடகர் ஒரத்தநாடு, டாக்டர். கோபு, ஆகியோர் முன்னிலை வைத்தனர்,அக்னி கிளப் நகர செயலாளர் ரோகிணி சங்கர் வரவேற்புரையாற்றினார். அரசு வழக்கறிஞர் இளஞ்செழியன், தஞ்சை ஜன சேவா பவன் செயலாளர் திருமதி.எஸ். சியாமளா, இந்தியன் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனர், திருஞானம் ஆகியோர்கள், விருது பெற்றோரை வாழ்த்தி பேசினார்கள். இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரீன் சாம்பியன் விருதுபெற்ற யாழினி தவச்செல்வன் மாண்புமிகு மகளிர் எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்.
2023-ஆம் ஆண்டுக்கான "சிங்கப்பெண்விருது"பெறுவோர்கள்: தஞ்சை மாநகர துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சிங்கப்பூர் சமூக ஆர்வலர் கவிஞர், திருமதி. தவமணிவேலாயுதம், அனு மருத்துவமனை நிர்வாக இயக்குனர். திருமதி தாரா சிவகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், திருமதி. கோமதி தங்கம், தஞ்சை தொழிலாளர் நலன் உதவி ஆணையர்,திருமதி. உமா மகேஸ்வரி, தஞ்சை பாம்பினோ மழலையர்பள்ளி, திருமதி. கல்பனா சண்முகசுந்தரம், வல்லம் பேரூராட்சி மன்ற தலைவர், திருமதி. செல்வராணி கல்யாணசுந்தரம், அன்னை பாரத சேவா அறக்கட்டளை தலைவர்,திருமதி.க. ஆனந்தி, இயற்கையின் தலைவன் நிறுவனங்கள் நிர்வாகி, திருமதி. சுகன்யா மோகன், வெட்டிக்காடு, தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர், திருமதி.சு.முத்தமிழ்ச் செல்வி, ஆகியோர்களுக்கு, ஆண்களுக்கு நிகரே பெண்களும் என்ற நிலையில் பல்வேறு சாதனைகளை படைத்த இவர்களுக்கு, சிங்க பெண்களுக்கான, "சிங்கப்பெண் விருதுகளை" தஞ்சை மாநகராட்சி துணை மேயர்,திருமதி, டாக்டர். அஞ்சுகம் பூபதி, பாரத் கல்விக்குழும செயலாளர்,திருமதி. புனிதா கணேசன், டாக்டர். சிவக்குமார் ஆகியோர் வழங்கி பாராட்டுரையாற்றினார்கள்.
விருது வழங்கிய இவர்களை பாராட்டும் விதமாக இவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக,5-30- மணிக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களின் மணி குழுவினரின், தப்பாட்ட கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது,6- மணிக்கு தமிழ்வேள் உமா மகேஸ்வரனார் கரந்தை கலைக் கல்லூரி மாணவிகள், 'பெண் எனும் பிறவியில்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது, அதனைத் தொடர்ந்து சிறப்பு கவிதை கவிதாயினி சன்மதி வாசித்தார், அதனைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வு நிகழ்ச்சி நிறைவாக அக்னி டிரஸ்ட் நிறுவனர்,எஸ்.எம். ரபீக் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியினை, அப்துல்கலாம் நல்வழி இயக்கத்தின் பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குனருமான, ராசி மணிவாசகன் ஒருங்கிணைத்து நடத்தினர். முன்னதாக வருகைதந்த அனைவருக்கும் சின்னத்திரை தளபதி குமரன் தங்கராஜன் பிறந்தநாளை முன்னிட்டு, 200- மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment