தஞ்சாவூர் உழவர் சந்தையில் விற்பனை செய்யும் காய்கறி விவசாயிகள் மற்றும் காய்கறி வாங்கும் நுகர்வோர்களின் பண பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் திங்கட்கிழமை அன்று இந்தியன் வங்கி மூலம் செயல்பாடு குறித்து விளக்கமளித்தது.
அதனுடன் வங்கி கணக்கு இல்லாத விவசாயிகள் , நுகர்வோருக்கு புதியதாக வங்கி கணக்கு துவங்கப்பட்டது. வங்கி கணக்கு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மற்றும் QR code வழங்கப்பட்டது. மென் பொருள் செயலி , POS வாடகை இல்லா வர்த்தகம்!
இந்தியன் வங்கியின் மொபைல் ஆப் INDOASIS மூலம் ஆன்லைன் வர்த்தகம் ! ஆகிய வசதிகள் வங்கி மூலம் செய்து தரப்படுகிறது .இந்த பயிற்சி முகாமிற்கு துணை இயக்குனர் வேளாண் வணிகம் கோ வித்யா தலைமை வகித்தார்.இந்தியன் வங்கி ஜோனல் மார்க்கெட்டிங் மேனேஜர் பெனட் முன்னிலை வகித்தார்.
தஞ்சாவூர் உழவர் சந்தை நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 லட்சம் மதிப்புள்ள 12 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிட தக்கது .இந்நிகழ்ச்சியில் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஜெய்ஜி பால், வேளாண்மை அலுவலர் தாரா, மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment