பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில்பன்னாட்டு ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் நிறைவு நாள் விழா
தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறையும் திருவையாறு தமிழய்யா கல்விக் கழகமும் இணைந்து நடத்தும் பன்னாட்டு ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் முனைவர் செ.காயத்ரி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகவில் டென்மார்க்கிலிருந்து இணையப் பயன்பாட்டு வல்லுநர் மதிப்புயர் ஹேமா ராமச்சந்திரன் அவர்கள் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுதல் எனும் பொருண்மையில் உரையாற்றினார். தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் அ.அல்போன்ஸ் சிந்தியா வரவேற்புரை வழங்கினார்.
தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் த.சுசிலா நன்றியுரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு. சத்தியா, தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் க.ஆனந்தி, முனைவர் கோ.அறிவழகி தமிழய்யா கல்விக் கழகம் ஔவை அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சு.கலைவேந்தன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment