திருவையாறு ஐயாரப்பர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் மூன்று நாள் நாட்டியாஞ்சலி விழா திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் அருள் ஆசியுடன் திருவையாறு ஐயாறப்பர் கோவில் திருவோலக்க மண்டபத்தில் மூன்று நாள் நாட்டியாஞ்சலி விழா துவங்கியது.
ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வக்கீல் அந்தோணிசாமி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். பொதுச்செயலாளர் முனைவர் குணசேகரன், பொருளாளர் பஞ்சநதம் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் இணைச்செயலான சந்திரசேகரன், துணைத்தலைவர்கள் சம்பத்குமார், குமணன், ரமேஷ் நல்லு, துணை செயலாளர்கள் குணாரஞ்சன், கிருஷ்ணமூர்த்தி, சரவணன், கலையரசி, உறுப்பினர்கள் பிரேமசாயி, குப்பு வீரமணி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், பரதநாட்டிய குழுவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஆசான வித்துவான் திருவையாறு சுவாமிநாதன் மற்றும் குழுவினரின் வீணை இசையுடன் விழா துவங்கியது. முதல்நாளான நேற்று தஞ்சை, திருவையாறு ஸ்ரீநிருத்தியாஞ்சலி நாட்டிய கலாலயம் சுபத்திரா, நிவேதிதா குழுவினர், சென்னை சதிர் சேஷத்ரா நாட்டியாலயா, ராணிப்பேட்டை ஸ்ரீபுகழாலயா பரதநாட்டிய பள்ளி, பாபநாசம் ஸ்ரீராக கீர்த்தனா சங்கீத வித்யாலயா, சென்னை திருவையாறு கலாலயா நாட்டியப் பள்ளி, திருவையாறு ஸ்ரீநித்யா சுந்தரநாட்டியாலயா, சென்னை பொன்னேரி அபிநயா நாட்டிய கலைக்கூடம், ஷிவானி அகாடமி, மித்ராலயா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ், தமிழ் இசை நாட்டிய கலைக்கூடம், ஸ்ரீநூபுர்லயா நாட்டியப் பள்ளி, தஞ்சை தாமரை டான்ஸ் அகாடமி குழுவினர் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஐயாறப்பர் சந்நிதியல் நாட்டியாஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment