மாட்டு வண்டி பந்தயம் : உற்சாகமான ரசிகர்கள் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 20 February 2023

மாட்டு வண்டி பந்தயம் : உற்சாகமான ரசிகர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருராட்சிக்குட்பட்ட பகுதியான நாட்டாணிக் கோட்டை கிராமத்தில் ரேக்ளா நன்பர்கள் மற்றும் கிராமத்தார்கள் இனைந்து நடத்திய நான்காம் ஆண்டு மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைப்பெற்றது. 

இதில் 30க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் வெளியூர்களிலிருந்து வந்து கலந்துக் கொண்டன இந்நிகழ்வில் முதல் பந்தயமான பெரிய மாடு பத்து வண்டிகளும் அதனைத் தொடர்ந்து கரிச்சான் மாடு பத்தயத்துக்கு 20 வண்டிகள் வந்ததால் அதை பத்து வண்டிகளாக பிரித்து இரண்டு பந்தயமாக நடத்தப்பட்டன. இந்த பந்தயத்தை கான ஏராளமான ரசிகர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். 

பந்தயங்களில் கலந்துக் கொண்ட மாடுகள் சீறிப் பாய்ந்தன சாலை இரு புரமும் பந்தய ரசிகர்கள் நின்று கண்டு மகிழ்ந்தனர். பேராவூரணி காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்


செய்தியாளர் த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad